வீடுகளில் வெள்ளை அடிக்கும் முறை காலம் காலமாக பயன்பாட்டில் உள்ளது. அதுவும் பொங்கல் வந்து விட்டால் கிராமத்து வீடுகளில் வெள்ளை அடிப்பதை அதிகளவில் பார்க்கலாம். வெள்ளை அடிப்பதை முறைப்படி செய்தால் சுவரின் தன்மை, பளபளப்பு பாதுகாக்கப்படும்.
கட்டுமானங்களில் வெள்ளை பெயின்ட் அடிக்கும் போது விசாலமான தோற்றத்தை தரும். ஆனால் எடுத்ததும் வெள்ளை பெயின்ட் அடிப்பதை தவிர்க்க வேண்டும். பெயின்ட் அடிப்பதற்கு முன்னால் வீட்டுச் சுவரை வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்த வேண்டும். சோப்பு கரைத்த தண்ணீரை வைத்து சுவரில் படிந்த புகை, எண்ணெய், உணவு கறைகளை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஓட்டைகள், விரிசல்கள் இருந்தால் மக்கு பூசலாம்.
உடைப்பு பெரிதாக இருந்தால் சிமென்ட் பூசி அப்பகுதியை சமன்படுத்தி 48 மணி நேரம் வரை உலரவிடலாம்.1 கிலோ சுண்ணாம்பு பொடியில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலக்கி ஒரு நாள் முழுக்க கலவையை அசைக்காமல் வைக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு துணியில் கலவையை ஊற்றி வடிகட்டவும். 20 கிராம் பெவிகாலை சுடு தண்ணீரில் கலந்து கலவையில் ஊற்றவும். இதில் 3 கிராம் இண்டிகோ நிறம் சேர்த்தால் சுவரில் பூச சுண்ணாம்பு ரெடியாகி விடும்.
இக்கலவையை பிரஷில் தொட்டு மேலிருந்து கீழ், இடதுபுறத்திலிருந்து வலது புறம் பூச வேண்டும். முதல் பூச்சு காய்ந்த பின் அடுத்த கோட்டிங் தரலாம். முதலில் கூரை, பரணில் பூசி பின் சுவரில் பூச வேண்டும். கலர் பெயின்ட் அடிக்கும் முன் வெள்ளை அடிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE