சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்துறை சார்ந்த புகார், தொழில் நுட்ப வசதிகளை பெற அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன் பெறலாம்.விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், பட்டு வளர்ச்சித்துறை, மீன் வளம், விதைச்சான்றுத்துறை ஆகிய துறைகள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.விவசாயிகள் கூடுதல் லாபம் பெற மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தற்போதுள்ள நீரை பயன்படுத்தி பயறு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்து பயன்பெற தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் புகார்கள், திட்டங்கள், தொழில் நுட்ப செய்திகள், பண்ணை இயந்திரங்கள் தேவை, வசதிகள் பெறுவதற்கு 94889 93077 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE