சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் முற்றுகை போராட்டம் : ஜன.7 ல் நடத்த விவசாயிகள் திட்டம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
சிவகங்கை : பெரியாறு, வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஜன.,7 ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பெரியாறு, வைகை 5மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலப்பூங்குடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஆர்., தேவர் தலைமை வகித்தார். ஆதிநாராயணன் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு

சிவகங்கை : பெரியாறு, வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஜன.,7 ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பெரியாறு, வைகை 5மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலப்பூங்குடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஆர்., தேவர் தலைமை வகித்தார். ஆதிநாராயணன் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசனம் 95 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனை மறுத்து விவசாயிகளை சந்திக்காமல் உதாசினப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜன.7 ல் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதில் தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லுசாமி, தேசிய தென்னக நதிகள் இணைப்ப குழு தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்கின்றனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிவகங்கை மாவட்ட பங்கு நீரை வழங்குவதாக எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே, முற்றுகை கைவிடப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X