காரைக்குடி : காரைக்குடியில் பாதாளச் சாக்கடை திட்டத்தால், சாலைகள் படு மோசமான நிலையில், புதிதாக போடப்பட்ட சாலைகளும் தரமற்று காணப்படுகிறது.
காரைக்குடி நகராட்சியில் ரூ.112.53 கோடியில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முறையாக குழாய்கள் அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணி நடக்காததால், சாலைகள் அனைத்தும் பள்ளங்களாக காட்சியளிக்கிறது. செக்காலை ரோடு, பஸ்ட் பீட், செகண்ட் பீட், வ.உ.சி.,ரோடு, செஞ்சை, உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து படுமோசமாக காணப்படுகிறது.இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளும் தரமற்ற நிலையில் இருப்பதால் கனரக வாகனங்கள் பதிந்து சிக்கிக்கொள்கின்றன. வாகன ஓட்டிகள் விரக்தி அடைந்துள்ளதோடு, பாதாளச் சாக்கடை திட்டம் காரைக்குடிக்கு ஒரு மோசமான சோதனைக்காலம் என எரிச்சல் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிக் கூறுகையில்; காரைக்குடி சாலைகளில் வாகனங்கள் செல்வது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது. பாதாளச் சாக்கடை பணிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் முறையாக சாலை அமைக்காததால், வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்கிறது. அரசின் பணம் தான் வீணடிக்கப்படுகிறது. பாதாளச் சாக்கடை பணி, புதிய சாலை அமைக்கும் பணியை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE