பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் தின விழா போட்டியில் பங்கேற்க அழைப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
சிவகங்கை : தேசிய இளைஞர்கள் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை மத்திய அரசின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் இளைஞர்கள் தின விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் முறையில் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட அளவிலான போட்டிகள் டிச.,29, ஜன். 3ல்

சிவகங்கை : தேசிய இளைஞர்கள் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை மத்திய அரசின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் இளைஞர்கள் தின விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் முறையில் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட அளவிலான போட்டிகள் டிச.,29, ஜன். 3ல் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஜன.,5 முதல் 8 வரை நடை பெறுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன., 12ல் நடத்தப்படுகிறது. தமிழக இளைஞர்கள் தங்களின் தனித்திறன் போட்டிகள், குழு போட்டிகளில் பங்கேற்கலாம்.

15 வயது முதல் 29 வயது வரை உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாணவரல்லாதவர்கள் கூட பங்கேற்கலாம். இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு போன்றவைகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் 74017 03503, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் 95854 52143, நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் 73061 77157 ஆகிய அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X