சென்னை: சுனாமி பேரலை தாக்கி பல லட்சம் பேரை பலி கொண்ட துயர சம்பவத்தின் 16 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 2004 ல் இதே நாள் டிச.26 நள்ளிரவில் கடல் கொந்தளித்து சுனாமி எனும் கொடூரன் பல உயிர்களை காவு வாங்கியது. இந்தோனேஷிய சுமத்ரா தீவில் கடல்பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமியாக உருவெடுத்தது.

அதிகப்பட்சமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா , தமிழகத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது. சுனாமியில் பலியானவர்களுக்கு உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டி சில்வர் பீச்சி, துறைமுகம் சிங்காரதோப்பு கடற்கரையில் பலியானவர்களை நினைத்து உறவினர்கள் கடலில் பால் ஊற்றி வணங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE