தமிழ்நாடு

விவசாயிகளின் வாழ்வில் காங்., விளையாடுகிறது; பிரதமர் பேச்சு

Added : டிச 26, 2020
Share
Advertisement
கோபி: ''விவசாயிகளின் வாழ்க்கையோடு, காங்., கட்சி விளையாடுகிறது. ''என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புதுடில்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விவசாயிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் கோபியில், கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பு

கோபி: ''விவசாயிகளின் வாழ்க்கையோடு, காங்., கட்சி விளையாடுகிறது. ''என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


புதுடில்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விவசாயிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் கோபியில், கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அருணாச்சல பிரதேசம், ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் பகுதி விவசாயிகளிடம், மோடி கலந்துரையாடினார். தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, சுப்பிரமணி என்ற ஒரு விவசாயிடம், பேசினார். அப்போது விவசாயி சுப்பிரமணி கூறுகையில், 'எனக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இந்தாண்டு சொட்டு நீர் மூலம், மூன்று ஏக்கர் பாசனம் செய்ததால், 1.40 லட்சம் ரூபாய் எனக்கு வருவாய் கிடைத்துள்ளது' என்றார்.

மோடியின் ஹிந்தி உரையை, பா.ஜ., விவசாய அணி, மாநிலத்தலைவர் நாகராஜ், தமிழில் மொழி பெயர்த்து பேசியதாவது: பாரத பிரதமரின் விவசாய திட்டத்தில், ஒரு திட்டத்தை கூட, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை. அங்கு, 17 லட்சம் விவசாயிகளுக்கு எந்த பயனும் வழங்கவில்லை. அதை காங்., கட்சி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது. விவசாயிகளின் வாழ்க்கையோடு காங்., விளையாடுகிறது. வேளாண் சட்டம் குறித்து, காங்., தவறான பிரசாரம் மேற்கொள் கிறது. வேளாண் சட்டம் மூலம், மிகப்பெரிய மாற்றம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் ஏமாற்றம்: ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியனிலும், இந்நிகழ்ச்சிக்கு வேளாண் துறையினர் ஏற்பாடு செய்தனர். 'டிவி' வைத்து உரையை கேட்க செய்தனர். பிரதமர் ஹிந்தியில் பேசியதை, பல இடங்களில், மொழி பெயர்க்காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த காலங்களில் இதுபோன்ற உரையாடலில், அந்தந்த மாநில மொழிகளில் 'ஸ்குரோலிங்' மூலம் பேச்சை காண வசதி செய்தனர். வரும் காலங்களில் எந்த துறை மூலம், இதுபோன்ற உரைகளை கேட்க ஏற்பாடு செய்தாலும், தமிழாக்கம் செய்ய வேண்டும், என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X