பொது செய்தி

தமிழ்நாடு

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

Added : டிச 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா, தேவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டு தொழுவத்தில் பிறந்த மகான் ஏசு கிறிஸ்துவை, ஆராதனை செய்யும் கிறிஸ்துமஸ் விழா, உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. முன்னதாக, கிறிஸ்து பிறந்த நாளான, நேற்று முன்தினம் நள்ளிரவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், பங்கு

ஈரோடு: ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா, தேவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டு தொழுவத்தில் பிறந்த மகான் ஏசு கிறிஸ்துவை, ஆராதனை செய்யும் கிறிஸ்துமஸ் விழா, உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. முன்னதாக, கிறிஸ்து பிறந்த நாளான, நேற்று முன்தினம் நள்ளிரவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், பங்கு தந்தை ஜான் சேவியர், உதவி பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, 12:00 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து குழந்தை ஏசு கிறிஸ்துவின் சொரூபத்துக்கு, சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் நேற்று காலை, 5:00 மணி முதல், 11:00 மணி வரை, ஆலயத்தின் தலைமை ஆயர் ரிச்சர்டு துரை தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், கொரோனா சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வழிபாட்டில் ஈடுபடடனர்.

* அந்தியூர், நகலூர், பவானி, ஆப்பக்கூடல், ஜம்பை பகுதி தேவாலயங்களில் நடந்த, கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லிங்கம்,சென்னை ஆமா...இதென்ன வைகுண்ட ஏகாதசியா...சொர்க்க வாசல் திறப்பிற்க்குகூட பக்தர்கள் வராமல் தடை போடுவதற்கு.... ம்... பிறந்தா சிறுபாண்மையினராக பிறந்து இருக்க வேண்டும்....இல்லை பிஜேபி இங்கு அதிகாரத்திற்கு வர வேண்டும்...!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X