மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, கார் மோதியதில் காயமடைந்த, விவசாயி இறந்தார். மொடக்குறிச்சி, கணபதிபாளையம் அருகேயுள்ள பள்ளிகாட்டு புதூரை சேர்ந்தவர் சபாபதி, 74; சாணார்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 80; இருவரும் விவசாயிகள். கடந்த, 23ம் தேதி மதியம், கணபதிபாளையம் நால்ரோட்டில், இருவரும் தனித்தனியே டூவீலரில் ரோட்டை கடந்தனர். அதிவேகத்தில் வந்த ஹோண்டா கார், டூவீலர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில், குமாரசாமி சேர்க்கப்பட்டார். நேற்றுமுன் தினம் இறந்தார். காரை ஓட்டி வந்த கஸ்பாபேட்டை, நாதகவுண்டம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் மீது, மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE