ஓமலூர்: ஆவணங்களை கேட்டதால், லாரி உரிமையாளர், லோடுமேன் ஆகியோர், போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்ததோடு, கைகலப்பு ஏற்பட்டது.
ஓமலூர் அருகே, குப்பூரில், தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், நேற்று மதியம், 12:00 மணிக்கு, வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, மரக்கட்டை ஏற்றப்பட்டிருந்த லாரியை நிறுத்தி, ஆவணங்களை கேட்டார். லாரி உரிமையாளர், டிரைவரான, காடையாம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த வெங்கடாசலம், 48, அவருடன் வந்த, 'லோடுமேன்' ராஜசேகரன், 26, ஆகியோர், ஆவணங்களை வழங்காமல் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இன்ஸ்பெக்டரின் சட்டை பட்டன் கழன்று விழுந்தது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். அதில், எடை தொடர்பாக, முறையான ஆவணங்கள் இல்லாததும், ராஜசேகரன் போதையில் இருந்ததும் தெரிந்தது. அப்போது ராஜசேகரன், 'இன்ஸ்பெக்டர், என்னையும், என் ஓனர் வெங்கடாசலத்தையும், கை, பூட்ஸ் காலால் தாக்கினார்' என குற்றம்சாட்டினார். ஆவணம் இல்லை என்பதால், அபராதம் செலுத்த வேண்டும். இல்லை எனில், வழக்குப்பதியப்படும் என, போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, 1,500 ரூபாய் செலுத்தியதால், அவர்களை எச்சரித்து, போலீசார் அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE