கிருஷ்ணகிரி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள, நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 4:45 மணிக்கு நவநீத வேணுகோபால சுவாமி, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என, கோஷம் எழுப்பினர்.
* கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோவில், பழையபேட்டை மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில், நரசிம்ம சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாய பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
* வேப்பனஹள்ளி கோதண்டராம சுவாமி கோவில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர் பெருமாள் கோவில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
* ஓசூர், வெங்கடேஷ் நகர், மலை மீதுள்ள லட்சுமி வெங்கட்ரமண சுவாமி மற்றும் தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:50 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. அதேபோல், குடிசெட்லு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி, கோபசந்திரம் தட்சின திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி, சூளகிரி பிரசன்ன வரதராஜ சுவாமி, பஸ்தலபள்ளி திம்மராய சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமி, தளி வேணுகோபால சுவாமி, ராயக்கோட்டை மகா விஷ்ணு லஷ்மி நாராயணர், கெலமங்கலம் சென்னகேசவ சுவாமி, தேன்கனிக்கோட்டை மராட்டர் தெருவில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
* தர்மபுரி அடுத்த, கோட்டை வரலட்சுமி உடனமர் பரவாசு தேவர் கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. 4:30 மணிக்கு மேல், மூலவருக்கு தங்க கசவம் அலங்காரம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 7:00 மணிக்கு, கோவில் உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோவில், அதகபாடி வெங்கட்ரமணசுவாமி கோவில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
* தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டை கரிய பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என, சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அரூர் பரசுராமன் தெருவில் உள்ள பெருமாள், தென்கரைகோட்டை கல்யாண ராமர் மற்றும் நஞ்சுண்டேஸ்வரர், நத்தமேடு சீனிவாச பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கடத்தூர் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சுவாமி தரிசனம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE