ஐதராபாத்: ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி போனில் விசாரித்தார்.
ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்ட நடிகர் ரஜினி, ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கை: நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக தான் இருந்தாலும், நேற்றைய தினத்தை விட குறைவாக உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கவலைப்படுவதற்கு எதுவும் தேவையில்லை. அவருக்கு இன்னும் சில பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை தான் கிடைக்கும்.

ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் கவனமுடன் தரப்படுவதுடன், அவரது உடல்நிலையை உன்னிப்பாக டாக்டர்கள் கவனித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் காரணமாக அவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதன் அடிப்படையில், ரஜினி வீடு திரும்புவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE