மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பும்ரா 4, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்த, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்னுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டு டெஸ்டில் சரிந்த இந்திய அணி, 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக மெல்போர்னில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பர்ன்ஸ், மாத்யூ வேட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா 'வேகத்தில்', பர்ன்ஸ் 'டக்' அவுட்டானார். வேகமாக ரன்கள் சேர்த்த மாத்யூ வேட், அஷ்வின் சுழலில் சி்க்கினார். தொடர்ந்து அசத்திய இவர் அபாயகரமான ஸ்மித்தை 'டக்' அவுட்டாக்கினார்.ஹெட் (38), பும்ரா வேகத்தில் அவுட்டானார். லபுசேன் (48), கிரீனை (12), முகமது சிராஜ் வெளியேற்றினார்.

டிம் பெய்ன் (13), அஷ்வினிடம் சரிந்தார். பும்ரா, மிட்சல் ஸ்டார்க்கை (7) அவுட்டாக்கினார். அடுத்து லியான் (20), கம்மின்ஸ் (9) அடுத்தடுத்து அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் வேகத்தில் மிரட்டிய பும்ரா 4, அஷ்வின் 3, சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் 'டக்' அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து, 159 ரன்கள் பின்தங்கி இருந்தது. புஜாரா (7), சுப்மன் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE