கரூர்: கரூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலத்துடன் நடந்தது. இயேசு கிறிஸ்து பிறந்தநாளை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு கரூர் புனித தெரசம்மாள் தேவாலயத்தில், பங்கு தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ?ஹன்றி லிட்டில் நினைவாலயத்தில், நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. மேலும், இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி, சிறப்பு பாடல்களும் பாடப்பட்டன.
* கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், சர்ச் கார்னர் சி.எஸ்.ஐ., ?ஹன்றி லிட்டில், மெமோரியல் சர்ச்சில், நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அதில், சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேக் வெட்டி, வழங்கினார். தேவாலய பாதிரியார் ஜான் பிரபாகரன், நகர, அ.தி.மு.க., செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE