பொது செய்தி

தமிழ்நாடு

கடும் பனி பொழிவு; கத்தரி விலை அதிகரிப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
கரூர்: கடும் பனிப் பொழிவு காரணமாக, கத்தரிக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த, 15 நாட்களாக தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்களின் விலை, மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. கடந்த மாதம், ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்ற வெள்ளை கத்தரிக்காய், 50 ரூபாய், நீல கத்தரிக்காய், 25லிருந்து, 45 ரூபாய்க்கு, நேற்று, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில்

கரூர்: கடும் பனிப் பொழிவு காரணமாக, கத்தரிக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த, 15 நாட்களாக தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்களின் விலை, மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. கடந்த மாதம், ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்ற வெள்ளை கத்தரிக்காய், 50 ரூபாய், நீல கத்தரிக்காய், 25லிருந்து, 45 ரூபாய்க்கு, நேற்று, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் விற்றது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் கத்தரிக்காய் செடிகள் கருகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. மேலும், பூச்சி தாக்குதலால் கத்தரிக்காய் வரத்து குறைந்து விட்டது. இதனால், இரண்டு வகை கத்தரிக்காய் விலையும் அதிகரித்து விட்டது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X