தி.மு.க., சார்பில் மக்கள் சபை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் மக்கள் சபை கூட்டம்

Added : டிச 26, 2020
Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த, சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி, குரும்பப்பட்டியில் தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி பேசியதாவது: ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று இந்த அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளது. ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதை தீர்மானிப்பவர் ஊராட்சி மன்ற தலைவர். அவர்கள், எப்போது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த, சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி, குரும்பப்பட்டியில் தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி பேசியதாவது: ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று இந்த அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளது. ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதை தீர்மானிப்பவர் ஊராட்சி மன்ற தலைவர். அவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றலாம். நம்முடைய தேவைகளை ஊராட்சி சபையில் வைத்து நிறைவேற்றி அனுப்புகின்ற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால், அரசு நமது உரிமையை பறிக்க நினைக்கிறது. பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சி மருத்துவமனைகளுக்கு, எம்.எல்.ஏ., நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதியை இதுவரை பயன்படுத்தவில்லை. இப்படிப்பட்ட, அ.தி.மு.க., அரசாங்கத்தை நிராகரிக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X