பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் வரி தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தை

Added : டிச 26, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் வரி வசூலிப்பது வழக்கம். சிலரிடம் வரி வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 'தங்களிடமும் வரி வாங்க சொல்ல வேண்டும்' என, கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீசாரிடம், அவர்கள் புகார் மனு

குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் வரி வசூலிப்பது வழக்கம். சிலரிடம் வரி வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 'தங்களிடமும் வரி வாங்க சொல்ல வேண்டும்' என, கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீசாரிடம், அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனடிப்படையில் நேற்று, குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தங்கம் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் தங்கம் கூறியதாவது: நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா தொடர்பாக, 10 குடும்பத்தாரிடம் வரி வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. யாருக்கும் எந்த மன சங்கடமும் இல்லாத வகையிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் எந்த ஒரு நபரிடமும் வரி வசூல் செய்வது வேண்டாம். ஒவ்வொருவரும், வரித்தொகையை கோவில் உண்டியலில் பெயர் எழுதி போட்டு விடுங்கள் என்று கூறியதற்கு ஒரு சில நபர்கள் அதற்கு உடன்படவில்லை. திருவிழாவில் பொதுவில் ஆடு வெட்டுதல் கூடாது; தனித்தனியாக வேண்டுதல் உள்ளவர்கள் நேர்த்திக்கடன் செலுத்திக்கொள்ளட்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X