பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
நாமக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் 'அசெம்பிளி ஆப் காட்' சபை மற்றும் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்து.* நாமக்கல்-சேலம் சாலையில் அமைந்துள்ள, 'அசெம்பிளி ஆப் காட்' சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாப்பட்டது. தலைமை போதகர் நாதன் தலைமை வகித்தார். கொரோனா தொற்று நடைமுறையாக, அதிகாலை, 5:30 மணிக்கும், காலை, 8:30 மணிக்கும், 10:30

நாமக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் 'அசெம்பிளி ஆப் காட்' சபை மற்றும் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்து.

* நாமக்கல்-சேலம் சாலையில் அமைந்துள்ள, 'அசெம்பிளி ஆப் காட்' சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாப்பட்டது. தலைமை போதகர் நாதன் தலைமை வகித்தார். கொரோனா தொற்று நடைமுறையாக, அதிகாலை, 5:30 மணிக்கும், காலை, 8:30 மணிக்கும், 10:30 மணிக்கும் மாலை, 6:30 மணிக்கும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் இயேசு பிறப்பு குறித்து சிறுவர், சிறுமியர் நாடகம் நடத்தப்பட்டது. சிறப்பு ஆராதனையில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.


* அதேபோல் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள, கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு, 11:50 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை, கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சி, பங்கு தந்தை ஜான்அல்போன்ஸ் தலைமையில் நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X