ராசிபுரம்: தமிழகம் முழுவதும், தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன் பேரில் கடந்த, நான்கு நாட்களாக நாமக்கல் மாவட்டம் முழுவதும், பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் பல்வேறு கிராமங்களில் கூட்டங்கள் நடந்து வருகிறது. ராசிபுரம் ஒன்றியம் முத்துக்காளிப்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 'தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறியதுடன், மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தற்போது கேட்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE