ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே பெரியசோளிபாளையத்தில், மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. பஞ்., தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் தங்கமணி, மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர், 20 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பேறுகால உதவித்தொகையை வழங்கினார். அதையடுத்து, கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். கலெக்டர் மெகராஜ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், கபிலர்மலை வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* கபிலர்மலையில் நடந்த, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், 313 பெண்களுக்கு, மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவை அமைச்சர் தங்கமணி வழங்கினார். யூனியன் சேர்மன் ரவி, நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE