நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கோவை, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பஸ்கள் செல்வதற்காக ஒருவழிப்பாதையாக எம்.ஜி.ஆர்., நுழைவு வாயிலில் இருந்து பூங்கா சாலை மற்றும் கோட்டை சாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, அம்மா உணவகம், அம்மா பூங்கா உள்ளிட்டவை செயல்படுகின்றன. சில மாதங்களுக்கும் முன், அம்மா பூங்கா அருகே சாலையின் ஓரம் தொடர்ந்து பல இடங்களில் மெகா சைஸ் குழி ஏற்பட்டது. அது குறித்து, நவ., 2ல் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியது. தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தினர் அந்த குழியை மூடினர். கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையில் மீண்டும் அங்கு குழி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கள்ளக்குறியில் இருந்து, 13 டன் தவிடு ஏற்றிக்கொண்டு வளையப்பட்டி சென்ற லாரி ஒன்று அந்த குழியில் இறங்கியது. பின் சக்கரங்கள் குழியில் சிக்கி வெளியே வரமுடியாமல் போனது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், இண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை மீட்டனர். அதனால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE