பொது செய்தி

தமிழ்நாடு

1200 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் சிலை கண்டெடுப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இறுஞ்சிறையில் 9ம் நுாற்றாண்டை சேர்ந்த சமண தீர்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.இதற்கு காரணமான பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது: திருச்சுழி அருகே நரிக்குடி இறுஞ்சிறையில் முனியாண்டி கோயில் உள்ளது. இதன் அருகில் சமண தீர்தங்கரர் சிலை உள்ளது. இது 9-ம் நுாற்றாண்டை சேர்ந்தது. பாண்டிய நாட்டில் சமணம்
1200 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் சிலை கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இறுஞ்சிறையில் 9ம் நுாற்றாண்டை சேர்ந்த சமண தீர்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதற்கு காரணமான பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது: திருச்சுழி அருகே நரிக்குடி இறுஞ்சிறையில் முனியாண்டி கோயில் உள்ளது. இதன் அருகில் சமண தீர்தங்கரர் சிலை உள்ளது. இது 9-ம் நுாற்றாண்டை சேர்ந்தது. பாண்டிய நாட்டில் சமணம் செழிப்பாக இருந்ததற்கு தொடர்ந்து கிடைக்கும் தீர்தங்கரர் சிற்பங்களே சாட்சி. இது மகாவீரரின் சிற்பம். 24 இன்ச் உயரம், 24 இன்ச் அகலம் உள்ளது.
சிற்பத்தின் தலைக்கு இருபுறமும் சாமரங்கள் உள்ளது. அரைவட்ட வடிவ பிரபாவளி உள்ளது. அதற்கு மேல் முக்குடை அமைப்பு உள்ளது. வலதுபுறம் சுருள் வடிவங்கள் காணப்படுகிறது. அது கமுக மரம் ஆகும். இதன் கீழ் அமர்ந்து தான் தீர்த்தங்கரர்கள் தவம் செய்வர். இடுப்பின் இறுபுறமும் நீளமான திண்டு உள்ளது. இதன் மேற் பகுதியில் மகரபட்டை உள்ளது.தீர்தங்கரர் பத்மாசன கோலத்தில் காணப்படுகிறார். இதை இந்த ஊரின் காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X