* காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடியில் காரில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பத்திரிகையாளர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதனை தடுத்த சக பத்திரிகையாளர் அபிஷே க் சோனி தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
*கேரள மாநிலம் பாலக்காட்டில் காதல் திருமணம் செய்த அனீஷ் என்பவர் மனைவி உறவினர்கள் மூலம் கொலை செய்யப்பட்டார்.
* டில்லி நிஜாமூதீன் போலீசார், வக்கீல் முகம்மது பிரச்சா என்பவர் மீது போலீஸ் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* கேரள மாநிலம் நெட்டுக்கல்தேரி பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ராஜேஷ் மற்றும் சீனிவாசன் சிறையில் இருந்து தப்பினர். ராஜேஷ் 10 ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்.
தெலுங்கானாவில் உடனடி லோன் வழங்குவதாக மொபைல் அப்ளிகேஷன் துவக்கி மோசடி செய்த சீனாவை சேர்ந்த 3 பேர் கைது.
குஜராத்தில் ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள போதை பொருட்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை இந்த ஆண்டில் ரூ. 3 கோடி மதிப்பு போதை பொருள் சிக்கி உள்ளது.
தமிழகத்தின் நிகழ்வு !
* கோவை, பொள்ளாச்சி, வேலூர், சேலத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை.
* சென்னை ஆயுதபடையில் பணியாற்றும் போலீஸ்காரர் பெரியமேட்டில் விஷம் குடித்து தற்கொலை.
* திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மீனாட்சி நகரை சேர்ந்தவர். அவரது மனைவி கவிதா (21). இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
உலக நடப்பு !
* ஆப்கனில் கபிசா என்ற பகுதியில் பெண்கள் நல உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் பிரஸ்ட்டா கோஷிடானி மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை.

* அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தில் நஸ்விலி என்ற பகுதியில் காரில் குண்டு வெடித்தது. 3 பேர் காயம். கட்டங்கள் சேதம்.
* பிரேசிலில் 34 வயது மதிக்கத்தக்க அன்னாடிசில்வா என்ற பெண் ஒருவரால் சுட்டுக்கொலை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE