பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளையடிப்பதே அ.தி.மு.க.,வின் கொள்கை - சாத்தூர் ராமச்சந்திரன்

Added : டிச 26, 2020
Share
Advertisement
அருப்புக்கோட்டை: ''கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட கட்சியாக அ.தி.மு.க., உள்ளதாக'' தி.மு.க., மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை, ஜவஹர் சங்க தெரு, காந்தி நகர் உட்பட பகுதிகளில் தி.மு.க., சார்பாக நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். ஸ்டாலின் தான் முதலமைச்சர். கடந்த முறை நீங்கள்
கொள்ளையடிப்பதே அ.தி.மு.க.,வின்  கொள்கை - சாத்தூர் ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டை: ''கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட கட்சியாக அ.தி.மு.க., உள்ளதாக'' தி.மு.க., மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை, ஜவஹர் சங்க தெரு, காந்தி நகர் உட்பட பகுதிகளில் தி.மு.க., சார்பாக நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். ஸ்டாலின் தான் முதலமைச்சர். கடந்த முறை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அ.தி.மு.க., கட்சியின் அமைச்சர்கள் அளவே இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட கட்சியாக உள்ளது. கொரோனா டெஸ்ட் எடுப்பதில் கூட கமிஷன் பார்க்கின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மாஸ்க்குகளில் கமிஷன். உங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் கூட கமிஷன் பார்க்கின்றனர். நல்ல அரிசியை விற்று விடுகின்றனர். மோசமான அரிசியை பாலீஸ் செய்து வழங்குகின்றனர் தி.மு.க., வை வெற்றி பெற வையுங்கள். நல்லது நடக்கும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X