மாட்டின் மீது ஸ்கூட்டர் மோதல் தவறி விழுந்த பெண் பலி

Added : டிச 26, 2020
Share
Advertisement
காரைக்கால்: மாட்டின் மீது ஸ்கூட்டர் மோதியதில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருவாரூர் மாவட்டம், பேரளம் கொல்லாபுரத்தை சேர்ந்தவர் ராமன் மனைவி சாந்தி,50; இவர் நேற்று முன்தினம் காரைக்கால் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.அம்பகரத்துார் அடுத்த நல்லம்பல் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் அருகே சென்றபோது, திடீரென சாலையின்

காரைக்கால்: மாட்டின் மீது ஸ்கூட்டர் மோதியதில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் கொல்லாபுரத்தை சேர்ந்தவர் ராமன் மனைவி சாந்தி,50; இவர் நேற்று முன்தினம் காரைக்கால் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.அம்பகரத்துார் அடுத்த நல்லம்பல் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது ஸ்கூட்டர் மோதியது. அதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சாந்தியை, அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.இதுக்குறித்து அவரது கணவன் ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X