பொது செய்தி

இந்தியா

பிரிட்டனிலிருந்து கர்நாடகா, கேரளா திரும்பிய 22 பேருக்கு கொரோனா

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கர்நாடகா திரும்பிய 14 பேருக்கும், கேரளா திரும்பிய 8 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், பிரிட்டனில் பரவும் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய, ரத்த, சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: பிரிட்டனில்
corona, coronavirus, covid19, kerala, karnataka, britain, strain, pune, shailaja, sudhakar, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, கர்நாடகா, கேரளா, சுகாதார அமைச்சர், சைலஜா, சுதாகர், பிரிட்டன், உருமாற்றம், வைரஸ்,புனே, ஆய்வகம்

திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கர்நாடகா திரும்பிய 14 பேருக்கும், கேரளா திரும்பிய 8 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், பிரிட்டனில் பரவும் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய, ரத்த, சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: பிரிட்டனில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய, அவர்களின் ரத்த, சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news





ஆய்வு


கோழிக்கோட்டில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், கொரோனா வைரசில் சிறிய அளவில் உருமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறோம். ஆனால், பிரிட்டனில் ஏற்பட்ட உருமாற்றம் போல் வைரசில் மாற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


1,638 பேருக்கு பரிசோதனை


latest tamil news


கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், பிரிட்டனில் இருந்து கர்நாடகாவிற்கு திரும்பிய 2,500 பேரில் 1,638 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 14 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், பிரிட்டனில் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றி ஆராய, அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-டிச-202005:01:06 IST Report Abuse
J.V. Iyer இவர்களை அடைத்து வையுங்கள். கொஞ்சநாள் வெளியில் விடவேண்டாம். நன்றி.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-டிச-202018:35:23 IST Report Abuse
A.George Alphonse இந்த 2021 - ம் 2020 போல் பயங்கரமான வருடமாக மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தி மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி உலக பொருளாதாரத்தை நிலை குலைய செய்யுமோ என்று உலகமே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தினந்தோறும் அழுது புலம்புவது ஆண்டவனுக்கு இன்னும் கேட்கவில்லையா? மன்றாடுவோம் அவரின் அருள் இரக்கத்திற்கு . நிச்சயம் அருள்புரிவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X