காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பு தாலிபான். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. ஆசிய கண்டத்தில் குளறுபடியை ஏற்படுத்த மேலைநாடுகள் தாலிபானுக்கு நிதி அளித்து வளர்த்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தாலிபானை வளர்க ஒரு கருவியாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு இம்ரான்கான் அரசு துணை போவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் கட்டாக் இதுகுறித்து கூறுகையில் ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் வைக்க பாகிஸ்தான் தாலிபான்களை பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அமைதிக்கு எதிராக இம்ரான் அரசு செயல்படுகிறது. மக்களின் வேதனையையும் வலியையும் தாலிபான் தற்போது புரிந்துகொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை குறைக்க முயலும் இந்த சமயத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை மேலும் வளர்த்து விடுவதாக அவர் கூறியுள்ளார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாலிபானின் துணை தலைவர் அப்துல் கனி கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலாகாலமாக தாலிபானுக்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அவர் இந்த பேட்டியை அளித்துள்ளார்.
1988 ஆம் ஆண்டு ஐநா கண்காணிப்பு அமைப்பு தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கு யார்யார் நிதி அளிக்கின்றனர் என்று கண்காணித்தது. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட லஷ்கர் பயங்கரவாதிகள் 5 ஆயிரம்பேர் ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் பகுதியில் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தி தாலிபான்களை கைக்குள் வைத்துக்கொள்ள அவர்களுக்கு நிதி அளித்து ஆதரவளிப்பதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE