அறிவியல் ஆயிரம்
எரிவாயு ரகசியம்
சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டு உள்ள 'புரோப்பேன், பூட்டேன்' திரவ வடிவில் இருக்கும். ஆனால் அது அடுப்புக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து 'கேஸ் லீக்' ஆனால், எளிதில் உணர 'எத்தில் மெர்கேப்டன்' ரசாயனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது வாசனை மூலம் நம்மை எச்சரிக்கை செய்யும். அப்போது எச்சரிக்கையுடன் அதை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வெளியாகும் திரவம் காற்றை விட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும். சிறிய தீப்பொறி பட்டாலும் பெரியளவில் தீ பற்றி விடும்.
தகவல் சுரங்கம்
இரண்டாவது பெரியது
பெருங்கடல்களில் இரண்டாவது பெரியது அட்லாண்டிக் பெருங்கடல். பரப்பளவு 10.6 கோடி சதுர கி.மீ. பூமியின் பரப்பளவில் 20 சதவீத இடத்தையும், பூமியின் நீர் பரப்பளவில் 29 சதவீதத்தையும் கொண்டுள்ளது. சராசரி ஆழம் 11,962 அடி. மேற்கு கண்டம் என அழைக்கப்பட்ட புதிய உலகத்தையும் கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் இணைக்கிறது. கிழக்கில் ஐரோப்பா, ஆப்ரிக்காவுக்கு இடையிலும், மேற்கில் அமெரிக்காவுக்கு இடையிலும் உள்ளது. எஸ் வடிவத்தை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE