ராஞ்சி:ஹார்வர்டு பல்கலை.,யில் பழங்குடியினருக்கான உரிமைகள் குறித்து ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உரையாற்றுகிறார்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் வரும் பிப்.,19ம் தேதி முதல் 21 ம் தேதிவரையில் 18 -வது இந்தியா மாநாடு குறித்து கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பழங்குடியினருக்கான உரிமைகள்குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில்கலந்துகொள்வதற்காக ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹே மந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹார்வர்டு பல்கலையை சேர்ந்தவரான சூரஜ் யெங்டே அழைப்பு கடித்ததை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக தற்போதைய அரசியலில் பழங்குடியினரின் அடையாளங்களை கொண்டுள்ளதாகவும் இது குறித்து இந்தியா கருத்தரங்கில் உரையாற்ற வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனை உறுதிப்படுத்திய மாநில அரசு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதல்வரின் பயணம் குறித்து தெரிவித்துள்ளது. அதில் ஹார்வர்ட் பல்கலை. அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும்,ஜார்க்கண்டில் பழங்குடியினர் உரிமைகள், நிலையான வளர்ச்சி மற்றும் நலன்புரி கொள்கைகள் குறித்து அவர் பேசுவார் என தெரிவித்துள்ளது.

Hon'ble Chief Minister @HemantSorenJMM has been invited to Harvard India Conference to deliver a keynote lecture in Feb 2021. Chief Minister has accepted the invitation & thanked the organisers. He will speak on tribal rights, sustainable development & welfare policies. @Harvard pic.twitter.com/IppTxQE2yJ
— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) December 26, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE