புதைத்து விடுவேன்!
சிறந்த நிர்வாகம் என்பது, மக்கள் அமைதியாக வாழ்வது தான். மத்திய பிரதேசத்தில் எந்த விதமான சட்ட விரோத நடவடிக்கைகளையும், சிறிதும் அனுமதிக்க மாட்டேன். சமூக விரோதிகள், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிடில், 10 அடி பள்ளம் தோண்டி, அவர்களை புதைத்து விடுவேன்.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
மீண்டும் திரும்புவர்!
மஹாராஷ்டிராவில், சட்டசபை தேர்தலுக்கு முன், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பலர், பா.ஜ.,வில் சேர்ந்தனர். பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில், கட்சி தாவினர். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், பா.ஜ.,வுக்கு சென்றவர்கள், இன்னும் நான்கு மாதங்களில், தேசியவாத காங்.,க்கு திரும்புவர்.
அஜித் பவார்
மஹாராஷ்டிர துணை முதல்வர், தேசியவாத காங்.,
என் வீட்டுக்கு வாங்க!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார். அவர், தன் வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார். அதனால், என் வீட்டுக்கு வர, கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கிறேன். விவசாய சட்டங்களால், விவசாயிகளுக்கு ஏற்படும் பலன்களை அவரிடம் விளக்குகிறேன்.
மனோஜ் திவாரி
எம்.பி., - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE