காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைது இரண்டு பேர் சுட்டுக்கொலை

Added : டிச 26, 2020
Share
Advertisement
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில், இரு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். மற்றொரு தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு, பயங்கரவாதிகள் வாகனத்தில் செல்வதாக, நேற்று முன் தினம், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், நர்வால் புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, அந்த வழியாக வந்த கார்,

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில், இரு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். மற்றொரு தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு, பயங்கரவாதிகள் வாகனத்தில் செல்வதாக, நேற்று முன் தினம், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், நர்வால் புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, அந்த வழியாக வந்த கார், தடுப்புகளை மீறி தப்பியது. காரை விரட்டிப் பிடித்த போலீசார், அதிலிருந்து, 'ஏகே' ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர்.

காரில் இருந்த, பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அஹ்மத் தார் மற்றும் சுப்ஜார் அஹ்மத் ஷேக் ஆகியோர் கைதாயினர். இவர்கள், பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்படுவோர் என, தெரியவருகிறது.

இதற்கிடையே, ஷோபியன் மாவட்டம் கனிகாம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, நேற்று முன்தினம் இரவு, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த, 'என்கவுன்டரில்' ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.இந்நிலையில், அப்பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று காலை மீண்டும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர்கள், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, விசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.


சுவர் இடிந்து 2 வீரர்கள் பலி



ஜம்மு - -காஷ்மீரின் கதுவா மாவட்டம், பில்லாவர் பகுதி ராணுவ முகாமில், நேற்று முன் தினம், சுவர் இடிந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய இரண்டு வீரர்கள் பலியாயினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு வீரர், பதான்கோட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X