புதுடில்லி:அசாமில், மூன்று 'கான்ட்ராக்ட்' நிறுவனங்கள், 100 கோடி ரூபாய்கு மேல், வருமானத்தை மறைத்து மோசடி செய்துள்ளதை, வருமானவரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், பிரபல, 'கான்ட்ராக்டர்'கள் வருமானத்தை கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளதாக, வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.கவுஹாத்தி, சிலாபதர் மற்றும் பட்சலா நகரங்கள் உட்பட, 14 இடங்களில், மூன்று நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், 100 கோடி ரூபாய் வரை, வருமானத்தை மறைத்து, அவர்கள் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது.அவர்களிடம் இருந்து, 2.85 கோடி ரூபாய் பணம், 9.79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
மூன்று கான்ட்ராக்டர்களும், வருமானத்தை கணக்கில் காட்டாமல், கோல்கட்டா மற்றும் கவுஹாத்தியில் போலி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகவும், அவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை தயாரித்து உள்ளனர்.கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE