பொது செய்தி

தமிழ்நாடு

தபால்துறைக்கு கைகொடுத்த 'அண்ணாத்தே!'

Added : டிச 26, 2020
Share
Advertisement
தபால் கார்டுகளால், இந்திய தபால் துறைக்குஏற்பட்ட நஷ்டத்தை தீர்க்க, விளம்பரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டவையே, 'மேகதுாத்'கார்டுகள்.அப்போது, தபால்துறைக்கு கரம் கொடுத்து,முதலில் இடம் பிடித்தவர், நடிகர் ரஜினிதான்என்கிறார்,ஓய்வு பெற்றதபால் அலுவலர் ஹரிஹரன்.இதுகுறித்து,அவர் கூறியதாவது:சமஸ்கிருத கவிஞர் காளிதாசின் காவியத்தின் பெயரே மேகதுாதம். இதன் பொருள், மேக

தபால் கார்டுகளால், இந்திய தபால் துறைக்குஏற்பட்ட நஷ்டத்தை தீர்க்க, விளம்பரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டவையே, 'மேகதுாத்'கார்டுகள்.அப்போது, தபால்துறைக்கு கரம் கொடுத்து,முதலில் இடம் பிடித்தவர், நடிகர் ரஜினிதான்என்கிறார்,ஓய்வு பெற்றதபால் அலுவலர் ஹரிஹரன்.இதுகுறித்து,அவர் கூறியதாவது:சமஸ்கிருத கவிஞர் காளிதாசின் காவியத்தின் பெயரே மேகதுாதம். இதன் பொருள், மேக துாதர்கள்.தபால்தலை சேகரிப்பாளர்களிடம், மேகதுாத் கார்டுகளுக்கு தனி மதிப்புள்ளது.சாதாரண தபால்கார்டு ஒன்றை தயாரிக்க, மூன்று ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், பொதுமக்களுக்கு,50 பைசாவுக்கு தபால்கார்டு விற்பனை செய்யப்படுவதால், தபால்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.இதற்கு தீர்வாக, 2002,செப்., 2ம் தேதி, விளம்பரத்துடன் கூடிய, மேகதுாத் தபால்கார்டு சேவையை தபால்துறை அறிமுகப்படுத்தியது.தேசிய அளவில் முதன் முறையாக, நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்துடன், பாபா திரைபட விளம்பரத்துக்காக, மேகதுாத் கார்டு வெளியிடப்பட்டது. இந்த கார்டில், 'தெரிஞ்சது கையளவு, தெரியாதது உலகளவு' என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும்.சாதாரண தபால்கார்டின் விலை,50 பைசா எனில், மேகதுாத் கார்டுகள்,25 பைசா. மேகதுாத் கார்டில் 50 சதவீத இடம் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். ஒரு கார்டில் விளம்பரம் செய்ய ஆகும் செலவு, இரண்டு ரூபாய். குறைந்தபட்சம், ஒரு லட்சம் கார்டுகள் பிரிண்ட் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படும்.2005ம் தேதி, மார்ச் 31ம் தேதி சந்திரமுகி படத்துக்கும், மேகதுாத் கார்டு வெளியிடப்பட்டது.இதுவரை, மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள், சமூக மற்றும் சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வுகள், தனியார் விளம்பரங்கள் என, 700க்கும் மேற்பட்ட வகையில் மேகதுாத் கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.இருந்தாலும், மேகதுாத் கார்டில் முதன்முதலில் இடம்பிடித்தவர் என்ற பெருமை, ரஜினிகாந்தையே சேரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X