தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள் உதயமாகி வரும் இக்கால கட்டத்தில், தரமான, சுவையான உணவு எங்கே கிடைக்கும் என, பொதுமக்கள் அல்லாடுகின்றனர். அவர்களுக்காக, சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் அமர்க்களப்படுத்தி வருகிறது, கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள கண்ணப்பா ஓட்டல்.செட்டிநாடு முறையில் உணவு தயாரித்து பரிமாறுவதால், கோவை மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தரம், சுவை, பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இதன் சிறப்பம்சம்.மதிய உணவுக்காக, கடைக்குள் நுழைந்தால், முதலில், 'குளுகுளு' இளநீர் பாயாசம் தருகின்றனர். அதை பருகினால், மனதில் இனம் புரியாத ஆனந்தம். பின், தலைவாழை இலையில் மட்டன் பிரியாணியுடன், மட்டன் சுக்கா, மட்டன் நல்லி சுக்கா, குடல் ப்ரை சுவை அற்புதம். மீண்டும் ஒரு முறை வாங்கி சாப்பிடும் அளவுக்கு சுவை அள்ளுகிறது.வஞ்சிர மீன் வறுவல், நாட்டுக்கோழி குழம்பு, இறால் தொக்கு, மீன் 'பார்பியூ' என பல்வேறு வகையான உணவுகளை வரிசைப்படுத்தி, அசத்துகின்றனர். மாலை நேரங்களில் இடியாப்பம், பணியாரம், ஆப்பம், முட்டைக்கறி ஊத்தாப்பம் என, ஸ்பெஷல் வகைகளால், வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.கண்ணப்பா ஓட்டல் உரிமையாளர் கண்ணன் மற்றும் தட்சிணா கூறுகையில், 'கடந்த, 10 ஆண்டுகளாக, செட்டிநாடு முறையில், தரம், சுவையான உணவுகளை தயாரித்து கொடுக்கிறோம். ஒவ்வொரு உணவுக்கும் தனி, தனி மசாலா பயன்படுத்துகிறோம்.ஒரு சாப்பாடு விலை ரூ.155 விற்கப்படுகிறது. காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை கடை செயல்படும். 'ஆன்லைனிலும்' ஆர்டர் செய்யலாம்' என்றனர்.தொடர்புக்கு: 95008 44944
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE