'மாவீரன் புலித்தேவன்' என்ற வரலாற்று நுால் வெளியீட்டு விழா, கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நேற்று நடந்தது; மேகலை தொழில் நிறுவன தலைவர் நாச்சியப்பன் வெளியிட, டாக்டர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் கோட்டீஸ்வரன் பேசுகையில், ''ஆங்கிலேயர்களை எதிர்த்து, தென்னகத்தில் வீரத்துடன் போராடிய மாவீரன் புலித்தேவன். வீரமிக்க தளபதிகள் அவரது படையில் இருந்ததால், ஆங்கிலேயர்களின் படையை பல முறை தோற்கடித்தார். தமிழகத்தின் தென்பகுதியில் இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்டவர். ''அவரை தொடர்ந்து முத்துவடுகநாதன், வேலுநாச்சியார் போன்றவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர். ''சுதந்திர போராட்ட வரலாற்றை எழுதுபவர்கள், கட்ட பொம்மனை முன்னிறுத்தி, தவறான வரலாற்றை எழுதுகின்றனர். ''வரலாற்றை கால வரிசைப்படி சரியாக தொகுத்து எழுத வேண்டும். புலித்தேவன் பற்றி, வரலாற்று பிழையின்றி, சரியாக எழுதப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE