சென்னை:சென்னை, ஆயுதப்படை போலீஸ்காரர், லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், பழைய வண்டிபாளையத்தைச் சேர்ந்தவர், சுரேஷ், 26. இவர், 2013ல் போலீசாக தேர்வாகி, சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த, 16ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. 19ம் தேதி முதல், பெரியமேட்டில், காவல் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். பணிக்கு வராததால், அவருடன் பணியாற்றும் சக போலீசார், அவரை தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அதற்கு, சொந்த வேலை இருப்பதால், அறை எடுத்து தங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு சாப்பிடுவதற்கு, அவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகம்அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், வேறு சாவி போட்டு, கதவை திறந்து பார்த்தனர். அங்கு, விஷம் அருந்திய நிலையில், சுரேஷ் இறந்து கிடந்தார். அவர் அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், 'என்னுடைய சுயமான முடிவு; யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்' என, எழுதப்பட்டிருந்தது.அவரது திடீர் தற்கொலைக்கு காரணம், காதல் பிரச்னையா, பணிச்சுமையா அல்லது உயரதிகாரிகள் தொந்தரவா என, பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE