கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்கு வருவோருக்கு வெப்பநிலை பரிசோதனை

Added : டிச 26, 2020
Share
Advertisement
சென்னை:'திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, திருநள்ளாறில், சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடப்பதால், அக்கோவிலில், இன்று முதல் பிப்., 12 வரை, சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கோவிலின், பரம்பரை ஸ்தானிகர் சங்கத்தின்

சென்னை:'திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, திருநள்ளாறில், சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடப்பதால், அக்கோவிலில், இன்று முதல் பிப்., 12 வரை, சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கோவிலின், பரம்பரை ஸ்தானிகர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன், 'சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், கோவிலுக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது' என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 'கோவிலுக்குள் செல்பவர்கள், கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.தடுப்பு விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்க வேண்டும். அதை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம், அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில், '48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட, கொரோனா பரிசோதனை சான்றிதழை, பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என, முடிவு எடுக்கப்பட்டது.அதை எதிர்த்து, காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதிகள் மகாதேவன்,மஞ்சுளா அடங்கிய அமர்வில்,அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.அப்போது, 'லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்து, சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.'வெப்ப நிலை அதிகம் இருக்கும் நபர்களுக்கு மட்டும், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வைரஸ் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டும், தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்திற்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X