சென்னை:'பிரதமர் மோடியையும்,ஹிந்து மதத்தையும் விமர்சனம் செய்த, எஸ்றா சற்குணத்தை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் தலைவர் முத்துரமேஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னையில், 18ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கூட்டத்தில், பாதிரியார் எஸ்றா சற்குணம், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். ஹிந்து மதத்தையும் களங்கப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
இது, அனைத்து மத மக்கள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில், கைது செய்ய வேண்டும். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE