பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்களுக்கு அதிக பஸ் இயக்க முடிவு

Added : டிச 26, 2020
Share
Advertisement
சென்னை:தமிழக சுற்றுலா தலங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி தலைமையில், நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 110 விதியின் கீழ்
 சுற்றுலா தலங்களுக்கு  அதிக பஸ் இயக்க முடிவு

சென்னை:தமிழக சுற்றுலா தலங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி தலைமையில், நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில், 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த, அம்பத்துார், ஆவடி பணிமனைகளை விரைவாக மேம்படுத்துவது; ஜப்பான் நிதியுதவியுடன், நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை துவக்குவது; நிர்பயா திட்டத்தின்படி, எம்.டி.சி., பஸ்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கட்டுப்பாட்டு மையத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அரசு விரைவு பஸ்களை அதிகம் இயக்கி, போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலா துறைக்கும் வருவாயை பெருக்கவும் முடிவு செய்யப் ட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பணிகள் விரைவுபடுத்தப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X