சென்னை:பா.ம.க., சார்பில், துணைத் தலைவர் சுப்பிரமணிய அய்யர் உட்பட, ஐந்து பேருக்கு, 'செயல்வீரர் விருது' வழங்கப்பட உள்ளது. வரும், 31ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில், விருது பெற்றவர்களை ராமதாஸ் பாராட்டி பேசுகிறார்.
பா.ம.க., தொண்டர்களையும், மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில், அக்கட்சி சார்பில், ஆண்டு தோறும் சிறப்பாக பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு, செயல் வீரர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான விருது, பா.ம.க., துணைத் தலைவர் திருத்துறைப்பூண்டி சுப்பிரமணிய அய்யர், அமைப்பு செயலர் செல்வகுமார், இளைஞரணி செயலர் செந்தில், மகளிர் அணி செயலர் நிர்மலா ராஜா, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தேர்வானோருக்கு, இளைஞரணி தலைவர் அன்புமணி, தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும், 31ல், பா.ம.க., இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், விருது பெற்றவர்களை பாராட்டி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார். விருது பெற்றவர்களுக்கு, தலா 1 சவரன் தங்கக்காசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE