அரசியல் செய்தி

தமிழ்நாடு

திரும்பினார்! ஐதராபாத்தில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு

Updated : டிச 27, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி, தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், 30ம் தேதி, அவர் மதுரை வருகிறார் என்றும், மறுநாள் காலை, கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும், மன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, பலத்த
ரஜினி, தமிழகம், ரஜினிகாந்த்,  மதுரை

ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி, தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், 30ம் தேதி, அவர் மதுரை வருகிறார் என்றும், மறுநாள் காலை, கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும், மன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, பலத்த ஆலோசனைக்கு பின், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க, அரசியல் கட்சி துவக்க போவதாக, இம்மாதம், 3 ம் தேதி அறிவித்தார்.



முழக்கம்



தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 'இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை' என்ற முழக்கத்தை, ரஜினி வெளியிட்டார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்புக்காக, தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணியை இறுதி செய்யாமல் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது. அவருடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., உட்பட, பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.,- - தி.மு.க., உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்களும், ரஜினி பக்கம் தாவ தயாராக உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வரும், 31ம் தேதி, தன் கட்சி பெயரை அறிவிக்கப் போவதாக, ரஜினி கூறியிருந்தார். அதற்கு முன்பாக, ஏற்கனவே உறுதி அளித்தபடி, 'அண்ணாத்த' படத்தை முடித்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, ‛அண்ணாத்த' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில், 14ம் தேதி துவங்கியது. ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. தொற்று பரவலை தடுப்பதற்காக, பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தபோதும், இரு தினங்களுக்கு முன், படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு, கொரோனா நோய் தொற்று உறுதியானது. அதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும், அவர் தான் தங்கியிருந்த ஓட்டலில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்வர் இ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட, முக்கிய தலைவர்கள், மொபைல் போனில், அவரிடம் நலம் விசாரித்தனர்.




ஒய்வு தேவை



அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் பூரண குணமடைய வேண்டி, ரசிகர்கள் வழிபாடும் நடத்தி வருகின்றனர்.

தற்போது, அவர் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் சிகிச்சை முடிந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

ஓரிரு நாள் ஓய்வுக்கு பின், வரும், 30ம் தேதி, அவர் மதுரை செல்கிறார். மறுநாள், ஏற்கனவே திட்டமிட்டபடி, அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் பூரண குணமடைந்து, 31ம் தேதி, கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே, அவரது ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-டிச-202022:18:40 IST Report Abuse
Vijay D Ratnam வாடி வா வீ ஆர் வெயிட்டிங். சினிமால பஞ்ச் டயலாக் என்ற பெயரில் உதார் உடுறது வேற. இங்க வந்த காட்டுங்க ஒங்க கிதாப்ப.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-டிச-202022:14:11 IST Report Abuse
தல புராணம் ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்ட முழி பிதுங்குதே. கட்சின்னு ஆரம்பிச்சு, செயற்குழு, பொதுக்குழு, நிழந்தர பொது சுயலர், நிரந்தர தலைவர், பொருளாளர், வசூல், தேர்தல் செலவுக்கு பணம், கட்சிகளுடன் உடனபாடு, தேர்தல் பிரச்சாரம், டெப்பாசிட் போனதுக்கு வியாக்கியானம்... இப்படி ஆயிரம் இருக்கே.. ஊ ஊ ஊ ஊ தான்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
27-டிச-202019:13:37 IST Report Abuse
raghavan முழு ஓய்வு தேவை. இதுவே காலத்தின் கட்டளை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X