சென்னை:பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் இருந்த நான்கு பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 64 ஆயிரத்து, 441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில், 295; கோவையில், 93 உட்பட மாநிலம் முழுதும், 1,019 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் ஐந்து பேர், பிரிட்டனில் இருந்து வந்தவர்கள்.
பிரிட்டனில் இருந்து நவம்பர், 25 முதல் வந்த, 2,300 பேரில், 1,362 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது. அவர்களில், 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது; 1,035 பேருக்கு பாதிப்பில்லை; மீதமுள்ள, 318 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.தொற்று கண்டறியப்பட்ட, 10 பேருடன் இருந்த, 81 பேரில், நான்கு பேருக்கு தொற்று பாதித்துள்ளது; 44 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுவரை, 1.38 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 13 ஆயிரத்து, 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தோரில், 1,098 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 92 ஆயிரத்து, 63 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
தற்போது, சென்னையில், 2,951; கோவையில், 870 என, 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் ஐந்து பேர் உட்பட, 11 பேர் நேற்று இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, 12 ஆயிரத்து, 59 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE