திருநெல்வேலி:முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் காலமானார்.துாத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் எம்.ஆர். ஜனார்த்தனன், 91. சென்னை மாநிலக் கல்லுாரியில் பயின்றார். மிசா காலத்தில் சிறை சென்றவர்.
திருநெல்வேலி பார்லிமென்ட் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், 1984ல் முதன் முறையாக எம்.பி.,யாக தேர்வானார். நான்கு முறை எம்.பி.,யாகவும், 1998ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். மனைவி ரத்தினம் காலமாகிவிட்டார். குழந்தைகள் இல்லை. உடல்நலக்குறைவால் சில தினங்களுக்கு முன், துாத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலையில் இறந்தார். இறுதி சடங்குஇன்று கடம்பூரில் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE