ஊட்டி:ஊட்டி அருகே, பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரியில் தோட்டக்கலை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான அனைத்து சுற்றுலா தலங்களும், கொரோனா விதிமுறை தளர்வுக்கு பின் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பைக்காரா ஏரியில் இருந்து மின் உற்பத்தி மற்றும் கிராமங்களின் குடிநீர் தேவைக்காக, நீர் திறக்கப்பட்டுள்ளது. 100 அடி உடைய பைக்காரா ஏரியில், தற்போது, 65 அடி வரை தண்ணீர் உள்ளது. இங்கு படகு சவாரி செய்வதில், சுற்றுலா பயணியர் மத்தியில், ஆர்வம் அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE