கூடலுார்:முதுமலையில் மூங்கில்கள் பூ பூத்து அழிய துவங்கி உள்ளதால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என, வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் வனக்கோட்டத்தில், மூங்கில் காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள், 40 ஆண்டுகளுக்கு பின், பூ பூத்து அரிசியாக மாறுவதுடன், அழிந்து விடுவது இயல்பு.
10 ஆண்டுகளுக்கு முன் சேரம்பாடி, பிதர்காடு வனப்பகுதிகளில் மூங்கில்கள் பூ பூத்து அழிந்து விட்டன.தற்போது, முதுமலை, கூடலுார் தேவாலா வனச்சரக பகுதிகளில் உள்ள மூங்கில்கள் பூ பூத்து வருகின்றன. மூங்கில் அரிசியை உட்கொள்ள பறவைகள் வர துவங்கி உள்ளன. பழங்குடி மக்கள் மூங்கில் அரிசி சேகரித்து வருகின்றனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'மூங்கில்கள் பல ஏக்கர் பரப்பில் அழிவால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும். உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகளால், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கான முன்னெச்சரிக்கை பணியை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE