பரமக்குடி : பரமக்குடி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழா நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, மாலை ராப்பத்து விழாதுவங்கியது. நேற்று காலை துவாதசி நாளை யொட்டி,பெருமாள் கருடவாகனத்தில் வீதிவலம் வந்தார். ஏகாதசி விரதம் இருந்த பக்தர்கள் கருடவாகனத்தை தரிசித்து பல்வேறு காய்கறி வகைகளை சமைத்து, காலையில் விரதம் முடித்தனர். மேலும்பல இடங்களில் அன்னதானம் நடந்தது.எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக ஏகாந்த சேவையில் சர்வ அலங்காரத்துடன் பெருமாள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சேஷவாகனத்தில் சயன கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஊஞ்சலில்சேவை சாதித்தார். நேற்று துவாதசி நாளில் கருடவாகனத்தில் வீதிவலம் வந்தார்.இதே போல் அனுமார் கோதண்ட ராமசாமி கோயில், நவநீதகிருஷ்ணன் என அனைத்து கோயில்களிலும் துவாதசிவிழா நடந்தது. பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE