சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை குப்பையில் வீசி தற்கொலைக்கு முயன்ற டாக்டர்

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020
Share
Advertisement
அவிநாசி:குழந்தையை குப்பைக்குள் வீசி சென்ற பெண், விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில், குப்பைக் கிடங்கில், ஐந்து வயதுள்ள சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.சிறுமி கிடந்த இடத்துக்கு அருகே, தின்பண்டம்,

அவிநாசி:குழந்தையை குப்பைக்குள் வீசி சென்ற பெண், விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில், குப்பைக் கிடங்கில், ஐந்து வயதுள்ள சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.சிறுமி கிடந்த இடத்துக்கு அருகே, தின்பண்டம், துணி உட்பட பொருட்கள் சிதறிக்கிடந்தன. பொருட்களை ஆய்வு செய்த போலீசார், 'பில்' விபரப்படி, பெங்களூருவில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விசாரித்தனர்.

ஒரு பெண் பொருள் வாங்கியதும், அவருடன், சிறுமி இருந்தது கடையில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப் பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, சிறுமி கிடந்த இடம் அருகே, ஒரு பெண் சந்தேகத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருந்தார்.

ஊர்மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பெங்களூரு, பைகெடனஹள்ளியை சேர்ந்த ஷைலஜா குமாரி, 39, என்பதும், சிறுமியை குப்பையில் வீசி சென்றதும் தெரிந்தது.


நடந்தது என்ன?



போலீசார் கூறியதாவது:ஷைலஜா குமாரி, தன்னை பல் மருத்துவர் என்றும், பெங்களூருவில் கிளினிக் வைத்துள்ளதாகவும் கூறுகிறார். கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார். பெங்களூருவில் இருந்து சத்தியமங்கலம் வழியாக, திருப்பூர் செல்லும் பஸ்சில் சென்றுள்ளார். மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, தன்னிடம் இருந்த இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்துள்ளார். சிறுமி சுய நினைவிழக்கவே, அவர் இறந்து விட்டதாக நினைத்து, குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அத்துடன், தானும் எலி மருந்து குடித்துள்ளார்.

அவரது உடல்நிலையும் மோசமாக உள்ளதால், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருவரின் உடல்நிலை இயல்புநிலைக்கு வந்தால் மட்டுமே, பின்னணி முழுமையாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X