திருநள்ளாறில் கடையடைப்பு, மறியல் | Dinamalar

திருநள்ளாறில் கடையடைப்பு, மறியல்

Added : டிச 26, 2020
Share
காரைக்கால்:திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்ற கவர்னரின் அறிவிப்பை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து

காரைக்கால்:திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்ற கவர்னரின் அறிவிப்பை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இன்று, அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இவ்விழாவை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்திட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால், முதல் சனிக் கிழமையன்று நடந்த ஆறுகால பூஜைகள் பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது. கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள், ஊழியர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.

இதை கண்டித்தும், அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வர்த்தக சங்கம் சார்பில் திருநள்ளாறில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வந்த வெளியூர் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என கூறினர். இதனால், கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, பரிசோதனை எடுக்க மறுத்து விட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் காலை, 10:45 மணியளவில் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். துணை கலெக்டர் ஆதர்ஷ், எஸ்.பி., வீரவல்லபன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. பின் அனைத்து கட்சியினர் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X