பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் மாயம்: தேடுகிறது சுகாதாரத்துறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் மாயம்: தேடுகிறது சுகாதாரத்துறை

Added : டிச 26, 2020
Share
மதுரை : பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 80 பேரில் நால்வர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுகிறது. பிரிட்டனில் இருந்து தேனி திரும்பிய இன்ஜினியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து 8 ஐரோப்பிய நாடுகளுக்கு மரபணு மாறிய கொரோனா வைரஸ் பரவி விட்டது. கடைசி 30 நாளில் அங்கிருந்து இந்தியா திரும்பியவர்களை சுகாதாரத்துறை

மதுரை : பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 80 பேரில் நால்வர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுகிறது.

பிரிட்டனில் இருந்து தேனி திரும்பிய இன்ஜினியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து 8 ஐரோப்பிய நாடுகளுக்கு மரபணு மாறிய கொரோனா வைரஸ் பரவி விட்டது. கடைசி 30 நாளில் அங்கிருந்து இந்தியா திரும்பியவர்களை சுகாதாரத்துறை தேடிப்பிடித்து தனிமைப்படுத்துகிறது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்கிறது. ஒரு மாதத்தில் மதுரை மாவட்டத்திற்கு மொத்தம் 80 பேர் பிரிட்டனில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 76 பேரை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது.

4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேவையில்லாத பயத்தில் இவர்கள் இருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். போலீஸ் உதவியுடன் நால்வரையும் தேடுகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதலில் 4 பேரும் தங்களை தனிமைப்படுத்துவது அவசியம். எங்களை தொடர்பு கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தருவது முக்கியம். எஞ்சிய 76 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் 2 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களை தவிர்த்து மற்ற 71 பேரை சோதித்ததில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளது. இவரை தாக்கியது புதிய வைரஸா என்ற ஆய்வு புனேயில் நடக்கிறது. இன்னும் முடிவு கிடைக்கவில்லை' என்றார்.தேனி இன்ஜினியருக்கு கொரோனாபிரிட்டனில் இருந்து தேனி மாவட்டம் வந்த 17 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த 38 வயது ஆண், 35 வயது மனைவி, 7 வயது மகள், 3 வயது மகனுடன் தாடிச்சேரி ஊராட்சி ஸ்ரீரெங்கபுரம் ஆலமரத் தெருவில் உள்ள தந்தை வீட்டுக்கு டிச.,20ல் வந்தார். விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டிச.24ல் சளி, உமிழ்நீர் மாதிரிகள் தேனி சுகாதாரத் துறையினராலும் பரிசோதிக்கப் பட்டது.

தற்போது இன்ஜினியருக்கு மட்டும் கொரோனா உறுதியானதால் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.மரபணு மாறிய வைரஸாஇன்ஜினியரைதாக்கியது மரபணு மாறிய வைரஸா அல்லது பழைய கொரோனா வைரஸா என்பதை அறிய சளி, உமிழ்நீர் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அவரது மனைவி, மகள், மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இன்ஜினியரின் 60 வயது தந்தை, 58 வயது தாய் ஆகியோர் பரிசோதனைக்கு பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X