புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, விளையாட்டு வீரர்கள் நலசங்க மாநில தலைவர் வளவன், துணை தலைவர் கோவிந்தராஜ், இணை செயலர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை சந்தித்து அளித்த மனு:தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசு பள்ளிகளை திறக்க அவசரம் காட்டுகின்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி அரசு பின்பற்றும் நிலையில் பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க, பள்ளிகள் திறக்கும் தேதியை மறுபரிசீலனை செய்யவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE